×

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு: ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விலை உயர்ந்தது. காதலர்களை காட்டிலும், காதல் மனைவிக்கு பூக்களை வாங்குவதற்கு கணவன்மார்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் ரோஜா பூக்களின் பங்கு மிக அதிகம் என்பதால் அதற்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுவது வழக்கம். இந்நிலையில், இப்போதே கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி, தேவதானப்பள்ளி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரோஜா மற்றும் கலர் ரோஜாக்கள் வகைகள் கூடை கூடையாக வந்து இறங்கின. ஒரு கட்டு சிவப்பு ரோஜா ரூ.300க்கும், கலர் ரோஜா ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘காதலர் தினம் என்றாலே கோயம்பேடு மார்க்கெட்டில் ரெட் ரோஜா மற்றும் கலர் ரோஜா பூக்களை வாங்குவதற்கு காதலர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது ரோஜா பூக்களை வாங்குவதற்கு காதலர்கள் எண்ணிக்கை திடீரென்று குறைந்துள்ளது. தற்போது காதல் மனைவிக்கு ரோஜாக்களை வாங்கி கொடுப்பதற்கு திருமணமான காதலர்களே அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர். மேலும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் இன்று காலை ரோஜா பூக்களை வாங்குவதற்கு சில காதலர்கள் மட்டும் வந்துள்ளனர் என்றும் நாளை ரோஜா பூக்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும்’ என்றார்.

The post காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு: ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Koyambedu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...